"பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக இருக்கும்" - இம்ரான் கான்

"பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக இருக்கும்" - இம்ரான் கான்
"பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக இருக்கும்" - இம்ரான் கான்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக அமையுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது, பாகிஸ்தான் வசம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கினார். 

பின்னர், இரண்டு நாட்களில் பாகிஸ்தான் அரசு அவரை விடுவித்தது. இந்த விவகாரத்தில் இம்ரான் கான் சிறப்பாக செயல்பட்டார் என்று ஒரு தரப்பினரும், உலக நாடுகளிடையே பாகிஸ்தானை அமைதி விரும்பியாக காட்டிக்கொள்ளவே இம்ரான் இப்படி நடிப்பதாக ஒரு தரப்பினரும் தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்திய தேர்தல் குறித்து இம்ரான் கான் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், ''மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் குறித்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியுள்ள இம்ரான், ஒருவேளை இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதற்கு அவர்கள் பயப்படுவார்கள். வலதுசாரிகள் பின்புலத்தில் இருக்கும் பயத்தினால் காங்கிரஸ் பயப்பட வாய்ப்புள்ளது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய முஸ்லீம்கள் ஒதுக்கப்படுவார்கள். இப்போதும் இந்தியாவில் முஸ்லீம்கள் தாக்கப்படுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை'' என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com