நடுவானில் எரிபொருள் பற்றாக்குறையால் தவித்த இந்திய போர் விமானம்-தக்க நேரத்தில் கிடைத்த உதவி

நடுவானில் எரிபொருள் பற்றாக்குறையால் தவித்த இந்திய போர் விமானம்-தக்க நேரத்தில் கிடைத்த உதவி
நடுவானில் எரிபொருள் பற்றாக்குறையால் தவித்த இந்திய போர் விமானம்-தக்க நேரத்தில் கிடைத்த உதவி

இந்திய விமானப் படையின் சுகோய் Su-30MKI போர் விமானத்திற்கு நடுவானில் பிரான்ஸ் நாட்டு விமானம் எரிபொருள் நிரப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிட்ச் பிளாக் 2022 என்ற இராணுவப் பயிற்சியில் பங்கேற்க, ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் (RAAF) டார்வின் தளத்தை நோக்கி இந்திய விமானப் படையின் சுகோய் Su-30MKI போர் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்திய போர் விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவே, பிரான்ஸ் விமானப்படைக்கு தகவல் அனுப்பப்பட்டது. இந்தியா - பிரான்ஸ் இடையேயான வலுவான நட்புறவு நீடித்து வருவதால் இந்திய போர் விமானத்தின் கோரிக்கையை ஏற்றது பிரான்ஸ் விமானப்படை. 

இதையடுத்து சுகோய் Su-30 MKI விமானத்திற்கு நடுவானில் எரிபொருளை நிரப்பியது பிரான்ஸ் நாட்டு விமானமான A330 Phenix. பிரான்ஸ் நாட்டின் இந்த செயலுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்து ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. “பிட்ச் பிளாக் 2022 என்ற இராணுவப் பயிற்சியில் பங்கேற்க, ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் (RAAF) டார்வின் தளத்தை நோக்கி இந்திய விமானப்படையின் குழு செல்கிறது. வான்வழியில் எரிபொருள் நிரப்ப உதவியதற்கு பிரான்ஸ் வான் மற்றும் விண்வெளிப் படையின் நண்பர்களுக்கு மனமார்ந்த் நன்றிகள்” என்று குறிப்பிட்டு அந்த பதிவு வெளியாகியுள்ளது.

பிட்ச் பிளாக் ராணுவப்பயிற்சி என்பது ஆஸ்திரேலியாவின் விமானப்படையால் (ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ்) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போர் பயிற்சியாகும். 17 நாடுகளின் படைகள் பங்கேற்கும் இந்த பயிற்சி ஆகஸ்ட் 19 அன்று ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், முக்கியமாக RAAF டார்வின் மற்றும் டைடல் விமானத் தளங்களில் தொடங்கும். இந்த பயிற்சி செப்டம்பர் 8 ஆம் தேதி முடிவடையும். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு முதன்முறையாக இந்த ராணுவப் பயிற்சி நடத்தப்படுகிறது. கடைசியாக, பிட்ச் பிளாக் பயிற்சி 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com