“சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முடங்க நான் காரணமா?!” -பெண் கேப்டன் அதிர்ச்சி

“சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முடங்க நான் காரணமா?!” -பெண் கேப்டன் அதிர்ச்சி
“சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முடங்க நான் காரணமா?!” -பெண் கேப்டன் அதிர்ச்சி

உலகின் பிஸியான நீர் வழித்தடமான சூயஸ் கால்வாயில் மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர் கிவன் கப்பல் தரை தட்டவும், அதனால் கப்பல் போக்குவரத்து முடங்கவும் எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டனான Marwa Elselehdar தான் காரணம் என அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை அறிந்து தான் அதிர்ந்து போனதாக அந்த பெண் கேப்டன் தெரிவித்துள்ளார். 

“இது என் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என நான் கருதுகிறேன். ஏனெனில் நான் எனது பணியில் சிறந்து விளங்குவதாலும் இல்லை என்றால் நான் எகிப்து நாட்டை சேர்ந்தவர் என்பதாலும் இந்த பொய் குற்றச்சாட்டு என் மீது வைக்கபட்டிருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் தங்களது சமூகத்தில் பெண்கள் குடும்பத்தினரை விட்டு நீண்ட தூரம் கடலில் பணியாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இருந்தாலும் நமது மனதுக்கு பிடித்த பணிகளை செய்யும்போது அதை கவனத்தில் கொள்ளக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். 

உலகளவில் கப்பல் மாலுமிகளாக 2 சதவிகித பெண்கள் தான் பணியாற்றுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அவர்களில் ஒருவர் தான் 29 வயதான Marwa Elselehdar. சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் தரை தட்டியபோது அவர் 100 மைல் தொலைவுள்ள துறைமுக நகரமான அலெக்சாண்டிரியாவில் இருந்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com