\
“16 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்”.. போட்டுடைத்த பத்மாலட்சுமி

“16 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்”.. போட்டுடைத்த பத்மாலட்சுமி

“16 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்”.. போட்டுடைத்த பத்மாலட்சுமி
Published on: 

16 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக இந்திய அமெரிக்க மாடலமான பத்மாலட்சுமி அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவானாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவருக்கு எதிராக, இரு பெண்கள் கடந்த வாரம் விரிவாக புகார் அளித்திருந்தனர். இதனால் துணிச்சல் அடைந்துள்ள இந்திய அமெரிக்க மாடலான பத்மா லட்சுமி, 16 வயதில் தானும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் அனைவரும் துணிச்சலுடன் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியிடும்போது, தானும் ரகசியத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கில், இதனை தெரிவித்திருப்பதாக பத்ம லட்சுமி கூறியுள்ளார். தன்னுடன் பழகிய, 23 வயது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதனை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும் பத்ம லட்சுமி கூறினார். அதே சமயம் அந்த நபரின் பெயரை பத்மாலட்சுமி வெளியிடவில்லை. பத்ம லட்சுமி சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com