‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு

‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு
‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ - பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு

பாகிஸ்தானில் 272 இடங்களுக்கு பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 270 தொகுதிகளுக்கான நிலவரங்கள் தெரியவந்துள்ளது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 76 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஷெரிஃப் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றதோடு, 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 42 இடங்களில் முன்னிலை பெற்றூ 3வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க 137 இடங்கள் தேவை. இம்ரான் கட்சி தற்போது வரை 120 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. அதனால், உதிரி கட்சிகளுடன் இணைந்து நிச்சயம் இம்ரான் கான் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. 

இந்நிலையில், இம்ரான் கான் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அதில், “பாகிஸ்தான் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். பாகிஸ்தானின் ஏற்றத்தையும், வீழ்ச்சியையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது எல்லாமே சீரழிந்துள்ளது. 22 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறது என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த அல்லாவிற்கு நன்றி. நான் கண்ட கனவைப் போல் பாகிஸ்தானை உருவாக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

சீனாவை மாதிரியாக கொண்டு பணியாற்ற விரும்புகிறேன். சீனா 70 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான். பாகிஸ்தானில் மக்கள் நல அரசை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அந்த அரசு நபிகள் ஆட்சி காலத்தில் இருந்ததை போன்றதாக இருக்கும். தொழில் செய்வதற்கு உகுந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்குவோம்” என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com