உலகம்
'பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புதிதல்ல': தலாய் லாமா
'பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புதிதல்ல': தலாய் லாமா
புத்த மத போதகர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை 25 வருடத்துக்கு முன்பே அறிந்திருந்ததாகவும் அந்த புகார் ஒன்றும் புதிதல்ல என்றும் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தலாய் லாமா நெதர்லாந்து சென்றுள்ளார். அங்கு புத்த மதப் போதகர்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், வரும் நவம்பர் மாதம் திபெத்தின் சமயத் தலைவர்கள், தர்மசாலாவில் ஒன்று கூட உள்ளனர் என்றும் அப்போது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து கலந்துரையாட வேண்டும் என்றும் தலாய் லாமா கூறினார். 25 ஆண்டுகளுக் கு முன்பே தாம் இதை அறிந்திருந்ததாகவும் இத்தகைய குற்றச்சாட்டுகள் புதிதல்ல என்று குறிப்பிட்டார்.