"எனக்கு சொந்தமான வீடுகளை விற்றுவிட்டேன்" - எலான் மஸ்க்

"எனக்கு சொந்தமான வீடுகளை விற்றுவிட்டேன்" - எலான் மஸ்க்

"எனக்கு சொந்தமான வீடுகளை விற்றுவிட்டேன்" - எலான் மஸ்க்
Published on

ஒரு வீட்டை தவிர எனக்கு சொந்தமான மற்ற வீடுகளை விற்றுவிட்டேன் என்று உலகப் பணக்கார்களின் வரிசையில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் எலான் மஸ்கிடம் "உங்களுடைய வீடுகளை எல்லாம் விற்றுவிட்டு மார்ஸ் கிரகத்தில் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதற்கு தேவையான செலவுகளை செய்வதாகவும், அதற்காக உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கி கொண்டதாகவுமே கேள்விப்பட்டேன்" எனக் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க் "பே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டை மட்டும் விற்கவில்லை. அதனை நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள வாடகைக்கு விடப்பட்டு இருக்கிறது. மற்ற வீடுகளை எல்லாம் விற்றுவிட்டேன்" என தெரிவித்துள்ளார். அதேபோல 2018 ஆம் ஆண்டு முதல் எலான் மஸ்க் வருமான வரியும் கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com