’நான் அமெரிக்காவை சார்ந்தவள் என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்’ - நடிகை ஏஞ்சலினா ஜூலி

’நான் அமெரிக்காவை சார்ந்தவள் என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்’ - நடிகை ஏஞ்சலினா ஜூலி
’நான் அமெரிக்காவை சார்ந்தவள் என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்’ - நடிகை ஏஞ்சலினா ஜூலி

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் நடிகை ஏஞ்சலினா ஜூலி. சமூக ஆர்வலராகவும் இயங்கி வருகிறார். பல்லுயிர் பாதுகாப்பு, அகதிகளுக்கான ஐ. நா ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் இவர் உள்ளார். இந்நிலையில், அமெரிக்க நாட்டை சார்ந்தவர் என்பதற்காக தான் வெட்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டு படை பின்வாங்கிக் கொல்லப்பட்டதை சாடும் வகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.  

“ஆப்கன் நாட்டின் உள்நாட்டு போர் குறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால் இதன் நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த போர் இப்படியாக முற்று பெற்றிருக்க கூடாது” என டைம் இதழின் தலையங்கப் பக்கத்தில் எழுதியுள்ளார் அவர். 

அங்கு சமாதானத்திற்கான பேச்சுவார்த்தையில் ஆப்கன் அரசு மற்றும் தலிபானுக்கும் இடையே விட்டுக் கொடுத்தது ஏன் என்றே புரியவில்லை. நம்மை நம்பிய கூட்டாளிகளை இப்படி பாதியில் கைவிட்டுள்ளது பலரது தியாகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

இதற்காக அமெரிக்க குடிமகளாக நான் வெட்கப்படுகிறேன். அங்குள்ள பெண்கள் மற்றும் சாமானியர்களின் நிலை இனி என்னவாகும் என்பதை நாம் கவனிக்க தவறி விட்டோம்” என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com