உலகம்
‘மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளேன்’-முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி மிட்சல் ஒபாமா
‘மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளேன்’-முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி மிட்சல் ஒபாமா
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவின் மனைவி மிட்சல் ஒபாமா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுட்டள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு ஆடியோ பேட்டி கொடுத்த அவர் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
‘கொரோனா ஊரடங்கு கால சிரமங்கள், அமெரிக்காவில் நிலவும் சமத்துவமற்ற இனவெறி பிரச்சனை, அதனால் வெடித்துள்ள போராட்டங்கள் மற்றும் அதிபர் ட்ம்பின் சீரற்ற ஆட்சி நிர்வாக முறையும் தான் எனது மன அழுத்தத்திற்கு காரணம்.
அதனால் எனது தூக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியே தூங்கினாலும் நள்ளிரவில் தூக்கம் களைந்து விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் நான் அது குறித்து கவலைபடுவது தான் ’ என சொல்லியுள்ளார் மிட்சல் ஒபாமா.