\
இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை வழங்கவுள்ளோம் - ட்ரம்ப்

இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை வழங்கவுள்ளோம் - ட்ரம்ப்

இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை வழங்கவுள்ளோம் - ட்ரம்ப்
Published on

இந்தியாவுக்கு அமெரிக்கா வென்டிலேட்டர்களை வழங்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''நட்புநாடான இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை அமெரிக்கா வழங்க இருக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். தொற்று நோய்க்காலத்தில் நாங்கள் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் பக்கபலமாக இருப்போம். மருந்து கண்டுபிடிப்பதிலும் நாங்கள் கூட்டாக முயற்சித்து வருகிறோம். நாங்கள் இணைந்து கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வோம்'' என தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் கொரோனாவால் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 3 லட்சத்துக்கு 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com