வளைகாப்பு நிகழ்ச்சி... மனைவியின் திருமணத்திற்கு மீறிய உறவை அம்பலப்படுத்திய கணவர்

வளைகாப்பு நிகழ்ச்சி... மனைவியின் திருமணத்திற்கு மீறிய உறவை அம்பலப்படுத்திய கணவர்
வளைகாப்பு நிகழ்ச்சி... மனைவியின் திருமணத்திற்கு மீறிய உறவை அம்பலப்படுத்திய கணவர்

வளைகாப்பு நிகழ்ச்சியில் மனைவியின் திருமணத்திற்கு மீறிய உறவை கணவர் அம்பலப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்பானிஸ் மொழியில் பேசுகின்றனர். அதில் வளைகாப்பு நிகழ்ச்சியில் அனைவரது முன்பும் கணவர் பேசுகிறார். “இவர் எனது வழக்கறிஞர். எங்களிடம் ஆவணம் ஒன்று உள்ளது. நான் ஒரு பையனை எதிர்பார்க்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இங்கே பாருங்கள். என்னிடம் கர்ப்ப பரிசோதனை முடிவு உள்ளது. நான் ஒரு அப்பாவாக இருப்பேன் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன தெரியும், நீங்கள் ஒரு முக்கியமான விவரத்தை கவனிக்கவில்லை. என் மனைவி 4 மாதம் கர்ப்பமில்லை. 6 மாத கர்ப்பம். அதற்கான ஆதாரம்தான் இது” எனத் தெரிவிக்கிறார்.

அந்த மனைவி தனது கணவரிடம் கெஞ்சுகிறார். ஆனால் அம்பலப்படுத்த தீர்மானித்த கணவர் மேலும் தொடர்ந்தார். அவரது வழக்கறிஞர் தன்னிடம் இருந்த லேப்டாப்பில் வீடியோ ஒன்றை அனைவருக்கும் காண்பிக்கிறார். அதில் அந்த மனைவியும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மற்றொருவரும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த நபரையும் கணவர் அனைவருக்கும் அறிமுகம் செய்கிறார்.

“இது என் குழந்தை இல்லை. அது இவர்கள் இருவருக்கும் உருவான குழந்தை” என கணவர் தெரிவிக்கிறார். இதைக்கேட்டு அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம் “உன் கணவர் என்ன சொல்கிறார்? எனக் கேட்கிறார். அதற்கு அந்த பெண் “அவர் தவறாக புரிந்து கொண்டார் அப்பா” எனக் கூறுகிறார்.

இதையடுத்து கணவர் அங்கிருந்து கிளம்புகிறார். ஆனால் மனைவி அவர் பின்னாடியே கெஞ்சிக்கொண்டு ஓடுகிறார். இதனிடையே கோபமடைந்த சக விருந்தினர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த நபரை தாக்குகின்றனர். இந்த வீடியோவை பார்த்த 2.2 மில்லியன் பார்வையாளர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com