200 கி.மீ வேகத்தில் ஃபுளோரிடாவை தாக்கியது இர்மா!

200 கி.மீ வேகத்தில் ஃபுளோரிடாவை தாக்கியது இர்மா!

200 கி.மீ வேகத்தில் ஃபுளோரிடாவை தாக்கியது இர்மா!
Published on

அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த இர்மா புயல், ஃபுளோரிடா மாகாணத்தில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதில் பல மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது. 

கரீபியன் தீவுகள், ஹைதி, கியூபா ஆகிய இடங்களை தாக்கிய இர்மா புயலானது அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்தது. அதிவேகமாக காற்‌று‌ வீசும்‌ என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் அறிவித்திருந்த நிலையில், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. புளோரிடா மாகாணத்தில் இருந்து 70 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றிலேயே இர்மா புயல் அதிக சேதம் உண்டாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு லட்சத்து 70 ஆயிரம்‌‌ வீடுகளுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 

இர்மா புயல் காரணமாக கரீபியன் தீவு பகுதிகளில் 25 பேர் உயிரிழந்த நிலையில், புளோரிடா தீவுகளில் வீசிய புயலினால் பல மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் இர்மா புயலுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com