\
ஹர்வி சூறாவளியை எதிர்கொள்ள ஆயத்தமாகும் அமெரிக்க மக்கள்

ஹர்வி சூறாவளியை எதிர்கொள்ள ஆயத்தமாகும் அமெரிக்க மக்கள்

ஹர்வி சூறாவளியை எதிர்கொள்ள ஆயத்தமாகும் அமெரிக்க மக்கள்
Published on

அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் ஹெர்வி புயல் நெருங்குவதால் மக்கள் அதை எதிர்கொள்ள ஆயத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அமெரிக்க மாகாணமான டெக்சஸில் உள்ள மக்கள், தங்கள் நாட்டை நெருங்கி வரும் 'ஹர்வி' சூறாவளியை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வருகின்றனர். குடிநீர் மற்றும் உணவுப்பொருள்களை அதிக அளவு வாங்கிச் சேகரிக்கும் பணியில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் வீடுகளில் வெள்ள நீர் புகாதவாறு தடுக்க மணல் மூட்டைகளை தயார் செய்து வருகின்றனர்.

கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு சூறாவளி காற்று தாக்கும் என்பதால் டெக்சஸின் கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் அங்கு பணிப்புரியும் பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com