ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதற்கு அமெரிக்காவே காரணம் எனக் கூறி , ஆப்கான் மக்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதை சாதகமாக்கி கொண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா வாழ் ஆப்கானிஸ்தான் மக்கள், வெள்ளை மாளிகை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தங்களை ஏமாற்றி விட்டார் என்றும் ஆப்கனின் இந்த நிலைமைக்கு பைடனே காரணம் என்றும் கூறி முழக்கங்களை எழுப்பினர். இதுவா சுதந்திரம் எனக் கேள்வி எழுப்பிய அவர்கள் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானை கைவிட்டுவிட்டதாக குற்றம்சாட்டினர்.