ஊரடங்கை தளர்த்துங்கள்: போராட்டத்தில் குதித்த அமெரிக்கர்கள்!

ஊரடங்கை தளர்த்துங்கள்: போராட்டத்தில் குதித்த அமெரிக்கர்கள்!

ஊரடங்கை தளர்த்துங்கள்: போராட்டத்தில் குதித்த அமெரிக்கர்கள்!
Published on

அமெரிக்காவில் ஊரடங்கை தளர்த்தக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரசால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 7லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 39ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 50ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில்,‌ படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முற்றிலுமாக ஊரடங்கை தளர்த்தி தங்களை வேலைக்குச் செல்ல அனுமதிக்குமாறு பொதுமக்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெக்சிகன், ஓஹியோ, வடக்கு கரோலினா, உடாத் ஆகிய மாகாணங்களில் அமெரிக்க கொடிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரடங்கை தளர்த்துவதால் தொற்றுநோய் பரவக் கூடும் என அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com