நாள் ஒன்றுக்கு 6200 முறை மாறும் மனித சிந்தனைகள் - ஆராய்ச்சியில் தகவல்
ஒரு மனிதன் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் முறை சிந்திப்பதாக கனடா நாட்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதனாய் பிறந்துவிட்டால் சிந்திக்காமல் இருக்க முடியாது. குழந்தை பருவத்தில் தொடங்கி முதுமை பருவம் வரை வயதிற்கேற்ப சிந்தனைகள் மாறிக்கொண்டே இருக்கும். சிந்தனையில் நல்லவையும் உண்டு தீவையும் உண்டு. எனவே சிந்தனை இல்லாமல் மனிதனுக்கு ஒருநாள் கூட முழுமை பெறாத என்றே கூறலாம்.
கனடா நாட்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒரு சராசரி மனிதன் நாள் ஒன்றுக்கு 6200 முறை சிந்திப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசியுள்ள அவர்கள் மனிதனின் மூளையில் சிந்திக்கும் இடம் தொடங்கி முடியும் இடம் வரை அடையாளப்படுத்தி வைத்திருப்பதாக கூறுகின்றனர்.
ஒரு மனிதனை தனிமைப்படுத்தி அவன் ஒரே சிந்தனை கொண்டவனாய் இருந்தால் அந்த நபரை "சிந்தனை புழு" என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.