ப்ளே பாய் நிறுவனர் ஹெப்னர் 91 வயதில் மரணம்

ப்ளே பாய் நிறுவனர் ஹெப்னர் 91 வயதில் மரணம்

ப்ளே பாய் நிறுவனர் ஹெப்னர் 91 வயதில் மரணம்
Published on

அமெரிக்காவில் 91 வயதான ப்ளே பாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெப்னர் மரணமடைந்தார்.

பிரபல ப்ளே பாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெப்னர் அமெரிக்காவில் மரணமடைந்தார். இவருக்கு வயது 91. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டில், வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக ப்ளே பா‌ய் இதழ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வீட்டின் சமையல் அறையில் இருந்து 1953 ஆம் ஆண்டு ஹெப்னர் ஆரம்பித்த ப்ளே பாய் இதழ் அதன் பின் உலகம் முழுவதும் அதிகம் விற்பனையாகும் ஆண்களின் இதழாக உருவானது.

அதிகபட்சமாக ஒரே மாதத்தில் 70 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்த ஹெப்னர்‌ தனது இதழின் அட்டைப் படத்துக்காக போஸ் கொடுத்த மாடல் மங்கைகளை‌யே திருமணம் செய்து கொண்டவர். ஆயிரம் பெண்களுக்கு மேல் தன்னிடம் நட்பாக இருந்ததாக தெரிவித்து உலகத்தையே வியப்படைய வைத்தவர்.

முதல் இதழிலேயே மெர்லின் மன்ரோவின் புகைப்படத்தை இதழின் அட்டைப் படத்தில் வெளியிட்டு அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். தனது 86 ஆவது வயதில் கிறிஸ்டல் ஹாரிஸ் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவர் வெளியுலகுக்கு அதிகம் தலைகாட்டாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது‌.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com