சூயஸ் கால்வாய்க்கு கிடைத்தது விடுதலை - எப்படி மீட்கப்பட்டது எவர்கிவ்வன் கப்பல்?

சூயஸ் கால்வாய்க்கு கிடைத்தது விடுதலை - எப்படி மீட்கப்பட்டது எவர்கிவ்வன் கப்பல்?

சூயஸ் கால்வாய்க்கு கிடைத்தது விடுதலை - எப்படி மீட்கப்பட்டது எவர்கிவ்வன் கப்பல்?
Published on

உலகின் முக்கியக் கடல்வழியான சூயஸ் கால்வாயை மறித்துக் கொண்டிருந்த எவர் கிவ்வன் கப்பல் நகர்த்தப்பட்டிருப்பதால், விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. மீட்புப்பணி எப்படி நடைபெற்றது? என்னென்ன சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நூற்றுக்கணக்கான பணியாளர்கள், ஏராளமான இயந்திரங்கள், கொஞ்சம் இயற்கையின் கருணை ஆகியவற்றின் உதவியுடன் மீட்கப்பட்டிருக்கிறது எவர்கிவன் கப்பல். எவர்கிரீன் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டபோது, உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. கால்வாயில் இருந்து கப்பலை மீட்பது எப்படி என்று அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் முதல் சாமான்யர்கள் வரை ஆலோசனைகளை அள்ளி வீசினார்கள். மீட்புப் பணியின் ஒவ்வொரு அசைவும் தொடர் நேரலையாக ஒளிபரப்பாகி வந்தது. சிஎன்என் போன்ற சில நிறுவனங்கள் சூயஸ் கால்வாயில் கப்பலை இயக்குவது எப்படி என்ற வீடியோ கேமை வடிவமைத்து மக்களுக்கு அறிவூட்டின. சூயஸ் கால்வாயின் முக்கியத்துவம் பற்றி பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

சூயஸ் கால்வாய் 193 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கப்பல் சிக்கிய இடத்தில் கால்வாயின் அகலம் 220 மீட்டர்கள். ஆழம் 25 மீட்டர். எவர் கிவ்வன் கப்பல் மிகவும் பிரமாண்டமானது. அதன் நீளம் 400 மீட்டர். இதன் 4 கால்பந்து மைதானத்தை அமைத்துவிடலாம். இதன் எடை 2 லட்சம் டன். அதாவது 2 லட்சம் கார்களின் மொத்த எடை. தண்ணீரில் மிதக்கும்போது சுமார் 15 மீட்டர் அளவுக்கு கப்பலின் அடிப்பகுதி நீரில் மூழ்கியிருக்கும்.

சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியபோது, முன்பகுதி முற்றிலுமாக கரையில் மோதியிருந்தது. பின்பகுதி சுமார் 4 மீட்டர் நெருக்கத்தில் கரையை அடைத்துக் கொண்டிருந்தது. அதை மீட்கும் பணியில் சூயஸ் கால்வாய் ஆணையமும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்மிட் என்ற நிறுவனமும் ஈடுபடத் தொடங்கின. அமெரிக்காவின் கடற்படையின் நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். பின்பகுதியில் திறன்வாய்ந்த இழுவைப் படகுகள் கப்பலை ஒரு புறமாகத் தள்ளியும் மறுபுறமாக இழுத்தும் நேரே திருப்பும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. முன்பகுதியில் சேற்றை அகற்றும் பணியில் இயந்திரங்கள் செய்து வந்தன. எதிர்பார்த்தது போல ஞாயிற்றுக்கிழமையன்று உயரமான அலைகள் வந்தன. அதே நேரத்தில் மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்குப் பலன் கிடைத்தது. கப்பலின் பின்பகுதி கரையில் இருந்து தள்ளப்பட்டது. கரையிலும் சேற்றிலும் சிக்கியிருந்த முன்பகுதி படிப்படியாக விடுவிக்கப்பட்டது.

 உலகின் மிக முக்கிக் கடல்வழி சூயஸ் கால்வாய். மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் 150 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. உலகின் 12 சதவிகித வர்த்தகம் நடைபெறும் இந்தக் கால்வாய் மறிக்கப்பட்டதால், நானூறுக்கும் அதிமான கப்பல்கள் நடுக்கடலில் தவித்து வந்தன. அவை இப்போது நகரத் தொடங்கினாலும், இதுவரையிலான தாமதத்தால் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரி செய்வதற்கே பல மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com