வடகொரியாவின் ஏவுகணை எத்தனை முறை தப்பித்தாலும் தாக்கி அழிக்க திட்டம் தயார்....

வடகொரியாவின் ஏவுகணை எத்தனை முறை தப்பித்தாலும் தாக்கி அழிக்க திட்டம் தயார்....

வடகொரியாவின் ஏவுகணை எத்தனை முறை தப்பித்தாலும் தாக்கி அழிக்க திட்டம் தயார்....
Published on

வடகொரியாவில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டால் அதை எதிர்த்துத் தாக்கவும் தாக்குதலில் தப்பித்தால் மீண்டும் தாக்கி அழிக்கவும் அண்டை நாடுகள் திட்டமிட்டிருக்கின்றன.

வடகொரியாவில் இருந்து ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டால், அவற்றை தன்னிச்சையாகவே இடைமறித்துத் தாக்கி அழிப்பதற்கு பல்வேறு வகையான ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. வடகொரியாவின் ஏவுகணை விண்ணில் பறக்கத் தொடங்குகிறது என்றால், தென்கொரியாவில் உள்ள அமெரிக்காவின் தாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு முதலில் அதைக் கண்டறிந்து தன்னிச்சையாக ஒரு ஏவுகணையை வீசும். அந்த ஏவுகணை வடகொரிய ஏவுகணையைத் தாக்கி அழிக்கும்.

ஒருவேளை தாட் ஏவுகணையில் இருந்து வடகொரிய ஏவுகணை தப்பிவிட்டால், ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஏஜிஸ் போர்க்கப்பல்களில் உள்ள ராடார்களில் அந்த ஏவுகணை சிக்கும். இதனால், ஏஜிஸ் கப்பல்கள் ஏவுகணையை வீசி வடகொரிய ஏவுகணையைத் தாக்கி அழிக்க முயற்சி செய்யும். அதில் இருந்தும் வடகொரிய ஏவுகணை தப்பிவிட்டால் ஜப்பானில் செயல்பாட்டில் இருக்கும் பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு வடகொரிய ஏவுகணையைத் தாக்கி அழிக்கும். ஜப்பானின் ஏதாவது ஒரு பகுதியைத் தாக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இந்த மூன்று ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளிடமிருந்து வட கொரிய ஏவுகணைகள் தப்பித்தாக வேண்டும். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com