ஜப்பானில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பது எப்படி? - அந்நாட்டு வாழ் இந்தியர் விளக்கம்

ஜப்பானில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பது எப்படி? - அந்நாட்டு வாழ் இந்தியர் விளக்கம்
ஜப்பானில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பது எப்படி? - அந்நாட்டு வாழ் இந்தியர் விளக்கம்


ஜப்பானில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பது எப்படி? - அந்நாட்டு வாழ் இந்தியர் விளக்கம்


ஜப்பானில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததற்கு தனிமனித ஒழுக்கமே காரணம் என ஜப்பான் வாழ் இந்தியர் கெளரி சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் பாதிப்பு உலக நாடுகளை இன்று பதற்றமாக்கி உள்ளது. சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் கொரோனா குறித்த அறிவிப்பை வெளியிட்டன. ஆனால் சீனா, இத்தாலி ஆகிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜப்பானில் கொரோனா பாதிப்பானது அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து கொரோனா பாதிப்பிலிருந்து ஜப்பான் மட்டும் எப்படி இந்த அளவில் தன்னை தற்காத்து கொண்டது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இதற்கான காரணத்தை அலசும் வகையில் ஜப்பானில் வாழும் இந்தியர் கெளரி சங்கரை புதிய தலைமுறை தொடர்பு கொண்டு பேசியது.

அவர் கூறியதாவது “சீனா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஜப்பான் கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜப்பான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை. இதற்கு காரணம் ஜப்பானில் வசிக்கும் மக்களின் தனிமனித ஒழுக்கம்தான். தற்போது வரை ஜப்பானில் 1000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் இருந்து ஜப்பானிற்கு வந்தவர்கள்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் யாரும் அதிகமாக வெளியே நடமாட வேண்டாம் என அரசுக் கேட்டுக்கொண்டது. அதனை பொதுமக்கள் அப்படியே கடைப்பிடிக்கின்றனர். ஆரம்பத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை.

முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெருநிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் பணியாளர்களுக்கு வேலை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் அரசின் விதிகளுக்கு ஒத்துழைப்பதால் இங்கு கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட கட்டுக்குள் வந்து விட்டது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com