b2 stealth bomber
b2 stealth bomberpt web

எப்படி நிகழ்ந்தது BUNKER BUSTERS ATTACK.. B2 stealth - ஒரு வல்லூறு தாக்குதல்..!

இஸ்ரேல் ஈரானை வீழ்த்த வேண்டுமென்றால், அது அமெரிக்காவின் துணை இல்லாமல் ஒருபோதும் நடக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ‘வீழ்த்துதல்’ என்பதை விட ‘கட்டுக்குள் வைத்திருத்தல்’ என்கிற வார்த்தை பிரயோகம் இங்கு சரியாக இருக்கும்.
Published on

வீழ்த்துவதா? கட்டுக்குள் வைத்திருப்பதா?

கடந்த சில நாட்களாகவே பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்ததை சாத்தியப்படுத்திக்காட்டிவிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இஸ்ரேல் ஈரானை வீழ்த்த வேண்டுமென்றால், அது அமெரிக்காவின் துணை இல்லாமல் ஒருபோதும் நடக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ‘வீழ்த்துதல்’ என்பதை விட ‘கட்டுக்குள் வைத்திருத்தல்’ என்கிற வார்த்தை பிரயோகம் இங்கு சரியாக இருக்கும்.

1981ல் ஈராக்கின் பாக்தாத்தில் இருக்கும் அணு நிலையங்களை F15 F16 ஃபைட்டர் ஜெட்கள் துணையுடன் இஸ்ரேல் தகர்த்தெறிந்தது. இஸ்ரேலுக்கு அவை எளிதாக இருந்ததற்குக் காரணம் அணு நிலையங்கள் நிலப்பரப்பிற்கு மேல் இருந்ததுதான். ஆனால், ஈரானின் ஃபோர்டோவில் இருக்கும் நிலையத்தை வீழ்த்த அமெரிக்காவின் GBU 57 தேவை; ஏனென்றால், அது நிலத்துக்கு அடியில் இருக்கிறது; அதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என ஆட்டத்தை தாமதப்படுத்திக் கொண்டிருந்த டிரம்ப், தடாலடியாக இன்று காலை மூன்று அணு நிலையங்களையும் தாக்கியிருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கும் திகில் கிளப்பி வந்த நாடுகளில் ஈரான் முக்கியமானது. அதிலும் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை எந்த அமெரிக்க அதிபரும் ரசித்ததில்லை. இதை எப்படி சாத்தியப்படுத்தினார் டிரம்ப்..?

b2 stealth bomber
கண்டனம் தெரிவிக்கும் பாகிஸ்தான்... ஐநாவை நாடும் ஈரான்... அமெரிக்க தாக்குதலில் அடுத்தடுத்த நிகழ்வுகள்

அனைத்து இடங்களிலும் ரெட் அலர்ட்

இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானின் மூன்று பகுதிகளை தாக்கிவிட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் சபைகள் முதல் அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவர் பெர்னி சாண்டர்ஸ் வரை பலரும் டிரம்பின் இந்த முடிவை கடுமையாக சாடியிருக்கிறார்கள்.

மத்திய கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் அமெரிக்க வீரர்கள் போர் முகாம்களில் இருக்கிறார்கள். டிரம்பின் இந்த தடாலடி முடிவால், அந்த எல்லா இடங்களுக்கும் ரெட் அலெர்ட் விடப்பட்டிருக்கிறது. அதே சமயம், மலைக்கு கீழே பாதுகாப்பாக இருக்கும் ஃபோர்டோ அணு நிலையத்தை தகர்க்க BUNKER BUSTERS தேவைப்படும் என்கிற நிலையில், அமெரிக்காவால் கூட அதை அவ்வளவு எளிதாக செய்ய முடியாது என்கிற கருத்தும் நிலவி வந்தது.

வல்லூறு மற்றும் b2 bombers.. ஒத்த உடலமைப்பு
வல்லூறு மற்றும் b2 bombers.. ஒத்த உடலமைப்பு

மிகவும் பாதுகாப்பான இடங்களில் இருக்கும் ஆயுதங்களையும், நிலையங்களையும் தகர்க்க வல்ல திறன் பெற்றவை பங்கர் பஸ்டர்ஸ். இந்த குண்டுகள் தடிமனான எஃகு உறைகளால் ஆனவை. இதே அளவிலான மற்ற குண்டுகளை விட குறைவான வெடிமருந்துகளே பங்கர் பஸ்டரில் இருக்கும். கனமான உறைகள் வெடிக்கும் முன் மண், பாறை, கான்கிரீட் போன்றவற்றை துளைக்கும்போது, வெடிமருந்து அப்படியே இருப்பதால், தகர்க்க வேண்டிய இடத்தை நெருங்கும் வரை எந்தவித சேதாரமும் இல்லாமல், மொத்தமாய் முடித்துக்கட்டும் வல்லமை பெற்றவை இந்த பங்கர் பஸ்டர்கள்.

b2 stealth bomber
“என்ன ஆனாலும் நாங்கள் நிறுத்தமாட்டோம்” அமெரிக்காவுக்கு ஈரானின் பதில்..

தாக்குதல் நிகழ்ந்தது எப்படி?

ஒன்றல்ல, இரண்டல்ல பல முப்பதாயிரம் பவுண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளை ஃபோர்டோ பகுதியில் வீசியிருக்கிறது அமெரிக்கா. இந்த பயங்கர ஆயுதத்தை போர்ச் சூழலில் அமெரிக்கா பயன்படுத்தியது இதுவே முதல் முறை. அந்தப் பகுதிகளை மீண்டும் தாக்கும் திட்டம் இல்லை என அமெரிக்கா தெரிவித்திருந்தாலும், ஈரான் ஒருவேளை இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்தால், அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும் என அமெரிக்க ராணுவம் எச்சரித்திருக்கிறது. அதே சமயம், ஈரோனோ மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க நிலையங்களை தாக்குவோம் என சூளுரைத்திருக்கிறது.

பி 2 பாம்பர்
பி 2 பாம்பர்pt web

ஆறு B2 பாம்பர்களின் துணையுடன் 12 பங்கர் பஸ்டர் குண்டுகளை ஃபோர்டோவில் வீசியிருக்கிறது அமெரிக்கா. நடான்ஸிலும், இஸ்ஃபானிலும் கடற்படையில் இருக்கும் நீர்மூழ்கிகளின் துணையுடன் 30 க்ரூஸ் மிஸைல்களை ஏவியிருக்கிறது. ஒரு B2 பாம்பர் துணை கொண்டு நடான்ஸ் பகுதியிலும் இரண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக மத்திய கிழக்கில் போர் பயிற்சியில் இருக்கும் அமெரிக்க கடற்படையின் துணையுடன் இதை சாத்தியடுத்தியிருக்கிறார் டிரம்ப். சங்கிலித் தொடர் போல், இதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை வரும் நாட்களில் நாம் காண இருக்கிறோம்.

b2 stealth bomber
எங்கும் போர் | அதிகார பசிக்கு குழந்தைகள் ஏன் சாக வேண்டும்? அவர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com