\
லண்டனில் காகங்கள் உணவருந்த ஓட்டல்

லண்டனில் காகங்கள் உணவருந்த ஓட்டல்

லண்டனில் காகங்கள் உணவருந்த ஓட்டல்
Published on: 

மனிதர்கள் உணவருந்த விதவிதமான ஓட்டல்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதே வேளை, காகங்கள் உணவருந்தும் வகையில் ஓட்டல் ஒன்று லண்டனில் திறக்கப்பட்டுள்ளது.

காகங்களின் மீது அதீத அன்பு கொண்ட சார்லஸ் கில்மோர் என்பவர் இந்த கடையை திறந்துள்ளார். வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில் வரவேற்பறையில் நிஜ காகமும் வைக்கப்பட்டுள்ளது‌. இந்த கடையில் காகங்கள் விரும்பி உண்ணும் புழு, கரப்பான்பூச்சி போன்று உணவு வகைகளும், இதைக் காண வரும் வாடிக்கையாளர்களுக்கு காகங்கள் வடிவில் பிஸ்கட் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது. காகம் வளர்ப்பின் அவசியத்தை ஏற்படுத்தும் விதமாக ஓட்டலை திறந்துள்ளதாக சார்லஸ் கில்மோர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com