\
Oil tanker in Hormuz
Oil tanker in HormuzReuters

அடித்து ஆடும் ஈரான்.. ஒரே இரவில் 7 கப்பல்கள்! போர்க்களமாகிய ஹார்முஸ்!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை தாக்குதல்: 7 எண்ணெய் கப்பல்கள் சேதம்
Published on: 
Summary

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை 7 எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கில் 2026 பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரமடைந்தது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய கருத்து வேறுபாடுகள் நீடிப்பதால் பதற்றம் தொடர்கிறது.

இந்நிலையில் பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்து வருகிறது . மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் கடற்படை கடலில் 7 எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் பல கப்பல்கள் வெடித்துத் தீப்பிடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை (IRGC) தெரிவித்துள்ளது.

oil tanker in hormuz
oil tanker in hormuz Reuters

ஈரான் அரசு ஊடகம் (Iran's State Television) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த பெரும் தாக்குதல் அக்டோபர் 22, 2026 அன்று நடந்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து, ஒரே நாளில் ஹார்முஸ் நீர்வழியில் இத்தனை கப்பல்கள் சேதமடைந்தது இதுவே முதல் முறையாகும்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படைப் பிரிவு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட கடல் பகுதியில் எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்த 4 எண்ணெய் கப்பல்கள் குறி வைக்கப்பட்டு, அவை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. இது தவிர, அந்த நீரிணையில் அமைக்கப்பட்டிருந்த ஈரானின் கடற்படை கண்ணிவெடிகளில் (Naval Mines) சிக்கி மேலும் 3 எண்ணெய் கப்பல்கள் நகர முடியாமல் முடங்கியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது காயமடைந்த மாலுமிகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட கப்பல்கள் எந்தெந்த நாடுகளின் கொடிகளைத் (Flags) தாங்கிச் சென்றன என்பதும் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

oil tanker in Hormuz
oil tanker in HormuzReuters

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மாற்று அல்லது சட்டவிரோத வழித்தடங்கள் மூலம் எண்ணெய் கப்பல்களை இயக்க முயன்றால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் (U.S. Bases) மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

மேலும், இந்தக் கடல் பாதையில் இயல்பான கப்பல் போக்குவரத்தை ஏழு நாட்களுக்குள் மீட்டெடுக்க முடியும் என்றும், அதற்கு ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றும் ஈரான் ஏற்கனவே அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் அதிகரித்து வரும் பதற்றம், அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை நீடித்தால் உலகளாவிய எண்ணெய் விநியோகம், எரிபொருள் விலை மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகியவை மேலும் பாதிப்புக்கு உள்ளாகும்.

Oil tanker in Hormuz
அமெரிக்காவுடன் சேர்ந்து ஆட்டம்..? பற்றி எரியும் பிரான்ஸ்.. நேரம் பார்த்து களத்தில் குதித்த ஈரான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com