சீனாவின் தேசிய தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு - ஹாங்காங்கில் நீடிக்கும் போராட்டம்

சீனாவின் தேசிய தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு - ஹாங்காங்கில் நீடிக்கும் போராட்டம்

சீனாவின் தேசிய தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு - ஹாங்காங்கில் நீடிக்கும் போராட்டம்
Published on

சீனாவில் தேசிய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலுப்படுத்தக் கோரி பொதுமக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது.

ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்குபவர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் சட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல வாரங்களாக போராட்டம் நீடித்ததை அடுத்து, அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. எனினும், சீனாவின் ஆளுமை தொடர்ந்து நீடிப்பதை எதிர்த்தும், ஜனநாயகத்தை வலுப்படுத்தக் கோரியும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் சீனா உருவான 70 ஆவது ஆண்டு தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீன தலையீட்டை கைவிட வலியுறுத்தியும் ஹாங்காங்கில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிகாலை முதலே இதற்காக ஆயத்தமான போராட்டக்காரர்கள், சாலைகளில் கறுப்பு வண்ண குடைகளுடன், கூடி மாபெரும் பேரணியை நடத்தினர். காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் பேரணி சென்றதால் மோதல் ஏற்பட்டது.

சீனாவின் ஒரே நாடு இரு அமைப்புகள் என்ற கொள்கையை ஹாங்காங்கிலும் அமல்படுத்துவோம் என தேசிய தின விழாவில் சீன அதிபர் ஸீ கூறினார். இதனையடுத்து ஆவேசமடைந்த பொதுமக்கள் காவலர்களை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசியெறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். அப்போது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com