\
போராட்டத்தில் வன்முறை: காதை கடித்து துப்பிய நபர்

போராட்டத்தில் வன்முறை: காதை கடித்து துப்பிய நபர்

போராட்டத்தில் வன்முறை: காதை கடித்து துப்பிய நபர்
Published on

ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்ட நிலையில் அரசியல்வாதி ஒருவரின் காதை கடித்து துப்பியதால் பதற்றம் ஏற்பட்டது.

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் டைகோசிங் பகுதியில் மனித சங்கிலி அமைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு திடீரென நுழைந்த ஒரு நபர், கத்தியால் அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கினார்.

ஜனநாயக கட்சி ஆதரவாளர் ஆண்ட்ரு சியூ (Andrew Chiu) என்பவரின் காதை அவர் கடித்து துப்பியுள்ளார். இதனிடையே தாக்குதல் நடத்திய நபரை போராட்டக்காரர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com