ஹாங்காங்கின் அடையாளம்.. கடலில் மூழ்கியது உலகப்புகழ் பெற்ற ஜம்போ மிதக்கும் உணவகம்!

ஹாங்காங்கின் அடையாளம்.. கடலில் மூழ்கியது உலகப்புகழ் பெற்ற ஜம்போ மிதக்கும் உணவகம்!
ஹாங்காங்கின் அடையாளம்.. கடலில் மூழ்கியது உலகப்புகழ் பெற்ற ஜம்போ மிதக்கும் உணவகம்!

ஹாங்காங்கில் உலகப்புகழ் பெற்ற புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது.

ஹாங்காங்கில் இருந்த ஜம்போ மிதக்கும் உணவகம் அந்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. ராணி எலிசபெத், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உள்ளிட்டோர் உள்ளிட்ட உலக பிரபலங்கள் உணவருந்திய உணவகமாக திகழ்ந்ததோடு, பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் இந்த மிதக்கும் உணவகம் இடம்பெற்றிருந்தது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக திகழ்ந்த ஜம்போ மிதக்கும் உணவகம், கொரோனா பெருந்தொற்றால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியது. இதையடுத்து கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஜம்போ மிதக்கும் உணவகம் மூடப்பட்டு அதில் பணியாற்றிவந்த அனைத்து பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் உணவகத்தை பராமரிக்க ஆகும் செலவை சமாளிக்க இயலாததால், மிதக்கும் உணவகம் கடந்த 14-ம் தேதி ஹாங்காங்கில் இருந்து புறப்பட்டது. இந்த நிலையில் தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அதன் உரிமையாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் உள்ளே நுழைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் கடைசியில் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது என்றும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. கப்பல் மூழ்கத் தொடங்கியவுடன் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 'அவசரநிலை' பிரகடனம்? அதிர்ச்சியூட்டும் காரணம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com