'எனக்கு வேற வழி தெரியல' - அலுவலகத்தில் குடியேறிய ஊழியர்: என்ன காரணம்?

'எனக்கு வேற வழி தெரியல' - அலுவலகத்தில் குடியேறிய ஊழியர்: என்ன காரணம்?

'எனக்கு வேற வழி தெரியல' - அலுவலகத்தில் குடியேறிய ஊழியர்: என்ன காரணம்?
Published on

தனது நிறுவனம் தனக்கு போதுமான ஊதியத்தை வழங்கவில்லை என்று கூறி அலுவலகத்தில் குடியேறி இருக்கிறார் அமெரிக்காவைச்சேர்ந்த ஒருவர்.

கொரோனா காலத்தில் பொதுமக்கள் வோர்க் ஃப்ரம் ஹோம் கலாசாரத்திற்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனது அலுவலகத்திற்கு சென்று வசிக்கத் தொடங்கியுள்ளார். காம் சைமன் என்ற பெயர் கொண்ட அந்த நபர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கே சென்று, அலுவலகத்தை தனது வீடாக பயன்படுத்தி வருகிறார். இந்த வீடியோ குறித்து அவர், 'இது என்னுடைய போராட்டம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ''இது நான் தான். என்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். நான் எனது குடியிருப்பில் இருந்து இங்கே மாறிவிட்டேன். எனக்கு நிர்வாகம் போதிய சம்பளம் தருவதில்லை. எதிர்ப்பாக, நான் என் அலுவலகத்திலேயே வாழப் போகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

சைமனை பொறுத்தவரை அவர் வேலைபார்க்கும் மேசைக்கு கீழே அவரது உடைமைகள் உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளார். அதற்கு கீழேயே படுத்துக்கொள்கிறார். அவர் நிறுவனத்தின் ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்திருந்த அன்னாச்சி பழங்களை கட் செய்து சாப்பிடுகிறார். அலுவலகத்தின் இரண்டாவது கட்டிடத்தில் தான் குளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com