ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் கார் திருட்டு

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் கார் திருட்டு
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் கார் திருட்டு
மிஷன் இம்பாசிபிள் 7 படப்பிடிப்பின் போது ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்-ன் கார் திருடு போனது.
மிஷன் இம்பாசிபிள் 7 திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரிட்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் டாம் க்ரூஸ், தனது விலை உயர்ந்த காரில் வந்துள்ளார். அந்த காரை நட்சத்திர ஹோட்டலுக்கு வெளியே நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது காருடன் சேர்த்து அதில் இருந்த லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது.
மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததால் காவல்துறையினர் அந்த வாகனத்தை மீட்டனர். கார் மீட்கப்பட்டாலும், காரில் இருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. காரை திருடிச் சென்றவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com