காதலுக்கு வயதில்லை  28 வயது காதலியை கரம்பிடித்த 59 வயது ஹாலிவுட் நடிகர்

காதலுக்கு வயதில்லை 28 வயது காதலியை கரம்பிடித்த 59 வயது ஹாலிவுட் நடிகர்

காதலுக்கு வயதில்லை 28 வயது காதலியை கரம்பிடித்த 59 வயது ஹாலிவுட் நடிகர்
Published on

அமெரிக்க நடிகரான 59 வயதுள்ள சீன் பென், நான்கு ஆண்டுகளாக பழகிவந்த ஆஸ்திரேலிய தோழி, நடிகை லைலா ஜார்ஜ்ஜை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி ரகசியமாக நடத்தப்பட்டதாக தகவலை ட்விட்டரில் வெளியிட்டு,  நடிகரின் நெருங்கிய நண்பர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சீன்பென் நடித்த மிஸ்டிக் ரிவர் மற்றும் மில்க் போன்ற படங்கள் திரை விமர்சகர்களால் பாராட்டப்பட்டு விருதுகள் வென்றவை. அமெரிக்க நடிகர் வின்சென்ட் டி`ஓனோப்ரியோ, ஆஸ்திரேலிய நடிகை கிரேட்டா ஸ்கேட்சி தம்பதியின் மகள்தான் அவரது காதலி லைலா ஜார்ஜ். 

நியூயார்க்கில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து நடிகையாக மாறிய லைலா ஜார்ஜ், தன் தாயுடன்  சேர்ந்து ஆன்டன் செகாவ்வின் நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறார். சமூகச்  செயல்பாடுகள் மற்றும் சேவையில் ஆர்வம் கொண்ட சீன் பென், லைலா ஜார்ஜ் காதலில் விழுந்துவிட்டதாக பத்திரிகை தெரிவித்திருந்தது.

தன் தந்தையைவிட வயது குறைந்த இந்த 59 வயது ஹாலிவுட் கணவருடன் லைலாவுக்கு 24 வயதில் முதல் அறிமுகம் கிடைத்தது. நடிகர் சீன்பென்னுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்து குழந்தைகள் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com