ஆண்களுக்கு பாலியல் வன்கொடுமை - ஆஸ்கார் வென்ற ஹாலிவுட் நடிகர் மீது வழக்கு

ஆண்களுக்கு பாலியல் வன்கொடுமை - ஆஸ்கார் வென்ற ஹாலிவுட் நடிகர் மீது வழக்கு
ஆண்களுக்கு பாலியல் வன்கொடுமை - ஆஸ்கார் வென்ற ஹாலிவுட் நடிகர் மீது வழக்கு

ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி மீது 3 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"அமெரிக்கன் பியூட்டி" படத்தில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும், "தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்" திரைப்படத்தில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் வென்ற பெருமைக்குரியவர் கெவின் ஸ்பேசி. தற்போது 62 வயதாகும் அவர் மீது 3 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிட்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1995 மற்றும் 2013 க்கு இடையில், கெவின் ஸ்பேசியை திரையரங்கில் தொடர்பு கொண்ட 20 ஆண்களிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டதாக 20 தனித்தனி குற்றச்சாட்டுகள் பிரிட்டன் போலீசாருக்கு வந்தது. இப்புகார்கள் மீதான விசாரணையில் 3 ஆண்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வைத்த குற்றச்சாட்டிற்கு முதற்கட்ட ஆதாரம் இருப்பதை உறுதி செய்த போலீசார், கெவின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஹாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான கெவின் ஸ்பேசி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் "ஆல் தி மனி இன் தி வேர்ல்ட்" திரைப்படத்திலிருந்தும் கெவின் நீக்கப்பட்டார். "ஜூன் 16 வியாழன் அன்று காலை 10 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கெவின் ஸ்பேசி ஆஜராக வேண்டும்." என்று பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com