நவம்பர 16ல் சகிப்புத்தன்மை நாளை கடைப்பிடிக்க என்ன காரணம்? வரலாறு அறிவோம்!

நவம்பர 16ல் சகிப்புத்தன்மை நாளை கடைப்பிடிக்க என்ன காரணம்? வரலாறு அறிவோம்!
நவம்பர 16ல் சகிப்புத்தன்மை நாளை கடைப்பிடிக்க என்ன காரணம்? வரலாறு அறிவோம்!

மனிதனாக பிறக்கும் எவருக்குமே அடிப்படையாக இருக்க வேண்டிய நற்குணங்களிலேயே மிகவும் அடிப்படையும், தேவையானதுமாக இருக்கக் கூடியது சகிப்புத்தன்மை. வேற்றுமையில் ஒற்றுமையை காண்பது என்பதற்கான அடிநாதமாக இருப்பதே சகிப்புத்தன்மை.

அத்தகைய பண்பும் நலனும் ஒரு மனிதனுக்கு இருக்கப் பெற்றால் எத்தகைய இடர்பாடுகளையும் வெல்லும் திறன் உண்டாகும் என்பதே அதன் சாராம்சமாகும். சகிப்புத்தன்மை மனிதனை முற்றிலும் மனிதனாகவே மாற்றும் வல்லமையை கொண்டதும் கூட.

ஆனால் உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியிருக்கும் இந்த நவீன காலத்தில் சக மனிதரிடம் சகிப்புத்தன்மை இருக்கிறதா, ஏதேனும் ஒரு சூழலில் அந்த சகிப்புத்தன்மையை ஒருவரிடம் எதிர்பார்க்க முடியுமா என்ற ஐயப்பாடு தற்போது எழுந்திருக்கிறது.

ஏனெனில், பந்தயத்தில் குதிரைகள் ஓடுவது போல வாழ்க்கை பந்தயத்தில் மனிதர்கள் தங்களது நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சக மனிதர்களை சகித்துக் கொண்டு ஒன்றிணைத்துச் செல்வது சற்று கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆகவே மனிதர்களிடத்தில் சகிப்புத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுதான் சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாளாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதியை அறிவித்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சகிப்புத்தன்மை குறித்த விழிப்புணர்வு உலகில் உள்ள ஒவ்வொரு பொதுமக்களுக்கும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்டது.

உலக சகிப்புத்தன்மை நாள்: வரலாறும்.. முக்கியத்துவமும்!

யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபெற்றத்தை குறிக்கும் விதமாக 1995ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் சர்வதேச சகிப்புத்தன்மை நாளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 1996ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதி உலக சகிப்புத்தன்மை நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமூக-பொருளாதார குழுக்களிடையே சகிப்புத்தன்மையின் உணர்வை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மாநாடுகள் மற்றும் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும்,

மகாத்மா காந்தியின் 125வது பிறந்த நாள் ஆண்டை குறிக்கும் விதமாக சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் உணர்வை ஊக்குவிப்பதற்காக யுனெஸ்கோ விருது ஒன்றையும் தோற்றுவித்தது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் 16ம் தேதியன்று அமைதி மற்றும் சகிப்புத்தன்மைகாக சிறந்த முறையில் தங்களது பங்களிப்பை வழங்கும் அமைப்பு, நபர்கள், நிறுவனங்களுக்கு யுனெஸ்கோவின் விருது வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com