உலகம்
விநாயகரை கொச்சைப் படுத்துவதா? ஆஸி.யில் கண்டனப் பேரணி
விநாயகரை கொச்சைப் படுத்துவதா? ஆஸி.யில் கண்டனப் பேரணி
இந்து கடவுளான விநாயகர், ஆட்டிறைச்சி உண்பது போல வெளியிடப்பட்ட விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துகள் அங்கு கண்டன பேரணி நடத்தினர்.
இந்து கடவுளான விநாயகர் உள்பட பல்வேறு மதங்களை சேர்ந்த கடவுள்கள், ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் ஒன்று ஆஸ்திரேலியாவில் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் இந்துக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் (ஐஎப்ஏ) கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த விளம்பரத்தை தடை செய்ய வலியுறுத்தின. ஆனால் அது நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்த கண்டன பேரணி நடத்தப்பட்டது. சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் ஏராளமான இந்துகள் கலந்துகொண்டனர்.