பாகிஸ்தான் வரலாற்றையே புரட்டிப்போட்ட இந்துப் பெண்!

பாகிஸ்தான் வரலாற்றையே புரட்டிப்போட்ட இந்துப் பெண்!
பாகிஸ்தான் வரலாற்றையே புரட்டிப்போட்ட இந்துப் பெண்!

பாகிஸ்தான் செனட்(எம்பி) தேர்தலில் முதல் முறையாக அங்கு சிறுபான்மையினரான இந்துப் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை மேலவை எம்பிக்களுக்கான தேர்தல் நடைபெற்றது. 33 எம்பிக்களுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் ஆளும் கட்சியான நவாஷ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 15 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஆசிஃப் ஷர்தாரி வழிகாட்டுதலில் செயல்படும் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்சியில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது. தாலிபான் இயக்கம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் சிறுபான்மையினரான இந்துப் பெண் கிருஷ்ண குமாரி நிறுத்தப்பட்டார். இவர் தாலிபான் வேட்பாளரை தோற்கடித்து பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக செனட் தேர்தலில் வென்ற இந்துப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுதொடர்பாக பேசிய கிருஷ்ண குமாரி, “இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் செனட் உறுப்பினராவேன் என நினைத்துப் பார்த்ததில்லை. நான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். பெண்களின் உரிமைக்காவும், அவர்களின் மருத்துவம் மற்றும் கல்விக்காகவும் சிறப்பாக பணியாற்றுவேன்” என்று கூறியுள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com