\
ட்ரம்ப் பதவியேற்பில் பங்கேற்கிறார் ஹிலரி

ட்ரம்ப் பதவியேற்பில் பங்கேற்கிறார் ஹிலரி

ட்ரம்ப் பதவியேற்பில் பங்கேற்கிறார் ஹிலரி
Published on: 

அமெரிக்கவின் அதிபராக பதவி எற்கவிருக்கும் டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹிலரி கிளிண்டன் பங்கே‌ற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 4‌5ஆவது அதிபராக குடியரசுக் கட்சி சார்பில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார். இவ்விழாவில் பங்கேற்க போவதாக முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனும் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள நாட்டின் முக்கிய பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com