மாயமான கப்பலில் இருந்த 22 இந்தியர்கள் விடுவிப்பு!

மாயமான கப்பலில் இருந்த 22 இந்தியர்கள் விடுவிப்பு!

மாயமான கப்பலில் இருந்த 22 இந்தியர்கள் விடுவிப்பு!
Published on

மாயமான கப்பலில் இருந்த 22 இந்தியர்களும் கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

மும்பையை சேர்ந்த, ஆங்லோ ஈஸ்டன் ஷிப்பிங் என்ற நிறுவனத்தின் 'மரைன் எக்ஸ்பிரஸ்' என்ற வணிகக் கப்பல் 22 இந்தியர்களுடன் நைஜீரியாவுக்கு சென்றது. பனாமா நாட்டு கொடியுடன், 13 ஆயிரம் டன் எண்ணெய் ஏற்றி கொண்டு சென்ற இந்தக் கப்பல் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியின், பெனின் கடலோர பகுதியில் கடந்த வியாழக்கிழமை மாயமானது. 

இந்த கப்பலில் கேரளாவை சேர்ந்த 2 பேரும் இருந்துள்ளனர். கப்பலின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதை அடுத்து, கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்தியிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த தகவல் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நைஜீரிய நாட்டுடன் தொடர்பு கொண்டனர். கப்பலை தேடும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  

இந் நிலையில் கப்பலில் இருந்த 22 இந்தியர்களும் கடற்கொள்ளையர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பயணத்தை கப்பல் மீண்டும் தொடங்கியது என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடற்கொள்ளையர்களுக்கு பணம் கொடுத்து இவர்கள் மீட்கப்பட்டார்களா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. 

கடந்த 2016ம் ஆண்டில் 191 கப்பல் கடத்தல் சம்பவங்களும் மற்றும் 2017ம் ஆண்டில் 180 கப்பல் கடத்தல் சம்பவங்களும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com