எப்படி எல்லாம் கின்னஸ் சாதனை படைக்கிறாங்கப்பா…?

எப்படி எல்லாம் கின்னஸ் சாதனை படைக்கிறாங்கப்பா…?

எப்படி எல்லாம் கின்னஸ் சாதனை படைக்கிறாங்கப்பா…?
Published on

ட்விட்டர் கணக்கில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்து ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சூப்பர் மேரியோ காலம் தொட்டு இப்போது வரை வீடியோ கேம்கள் என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான், சூப்பார் மேரியோ விளையாடிய குழந்தைகள் பலர் இப்போது வளர்ந்து ப்ளே ஸ்டேசன் டெவலப்பர்களாக ஜொலிக்கின்றனர். அப்படி ஒரு வீடியோ கேம் பிரியர் தான் ‘ஹிடியோ கொஜிமா’. ஜப்பானின் புகழ் பெற்ற ப்ளே ஸ்டேசன் கேம் இயக்குநரான இவர், சமீபத்தில்தான் கின்னஸ் சாதனை படைத்தார்.

'Death Stranding'  என்ற வீடியோ கேம் மூலம் உலகின் மூலை முடுக்குகளில் இருக்கும் குழந்தை மனமுள்ள பலரது இதயத்தில் இடம் பிடித்த இவரது ட்விட்டர் கணக்கை 2.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதன் மூலம் உலகளவில் அதிகம் பேரால் பின் தொடரப்படும் கேம் இயக்குனர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. இதுவே அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வாய்ப்பாக அமைந்தது.

மேலும் இவரது இன்ஸ்டாகிராம் கணக்கை  930,000 பேர் பின் தொடர்கின்றனர். எப்படி எல்லாம் சாதனை படைக்கிறாங்க பாருங்க...?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com