இஸ்ரேல் - லெபனான்முகநூல்
உலகம்
இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்: கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித் தொடர்பாளர்!
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டார். பெய்ரூட்டில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டார். பெய்ரூட்டில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் ஹிஸ்புல்லாவின் செய்தித் தொடர்பாளர் முகமது அபிஃப் மற்றும் லெபனானை சேர்ந்த காவலர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, பெய்ரூட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அருகே உள்ள கட்டடங்களுக்கும் தீ பரவிய நிலையில், 2 பேர் உயிரிழந்தனர்.