அன்று பின்லேடன்; இன்று பக்தாதி: மோப்ப நாய்களின் அசாத்திய திறமை!

அன்று பின்லேடன்; இன்று பக்தாதி: மோப்ப நாய்களின் அசாத்திய திறமை!
அன்று பின்லேடன்; இன்று பக்தாதி: மோப்ப நாய்களின் அசாத்திய திறமை!

ஐஎஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் பக்தாதி கொல்லப்பட்டதில் கேனான் என்ற மோப்ப நாய் உறுதுணையாக இருந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அந்த நாய் எந்த இனவகையைச் சேர்ந்தது ?‌ அதன் சிறப்பம்சங்கள் என்ன ? 

பயங்கரவாதிகளை கண்டறிவதில் மோப்ப நாய்களின் பங்கு அளப்பரியது. உலகையே உலுக்கிய ஐ.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் பக்தாதி கொல்லப்பட்டதில், அமெரிக்க இராணுவத்திற்கு கேனான் என்ற மோப்ப நாய் பெரிதும் உதவியது. பக்தாதி பதுங்கியிருந்த இருப்பிடத்தை அந்த மோப்ப நாய் இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தது.

இந்த மோப்ப நாய் பெல்ஜியன் மாலினோயிஸ் என்ற இனத்தை சேர்ந்ததாகும். 14 வருடங்கள் வரை வாழக்கூடிய இந்த வகை நாய்கள், 66 சென்டி மீட்டர் உயர‌ம் வரை வளரக்கூடியவை. பார்ப்பதற்கு ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை போன்று தோன்றினாலும் பல வேறுபாடுகளை இவ்வகை நாய்கள் கொண்டுள்ளன. வளர்ப்பு நாய்களாகவும், மோப்ப நாய்களாகவும் இவை உலகம் முழுவதும் வளர்க்கப்படுகின்றன. 

அமெரிக்கா, பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நாயை இராணுவத்தில் பயன்படுத்துகின்றன. பெல்ஜியன் மாலினோயிஸ் நாயின் அசுர வேட்டைக்கு சான்றாக பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தென்னாப்பிரிக்காவில் நூற்றுக்கணக்கான காண்டாமிருக கடத்தல்காரர்களை இந்த வகை நாய் பிடிக்க உதவி இருக்கிறது. ஏன், ஒ‌சாமா பின்லேடனை பிடிக்கவும் இந்த வகை நாயைத்தான் அமெரிக்கா பயன்படுத்தியது.

ஒரே நாளில் ஹூரோ ஆக முடியுமா என்று கேட்டால், பக்தாதியை காட்டிக்கொடுத்த கேனான் நாயை நாம் சுட்டிக்காட்டலாம். அமெரிக்கா தவிர ஒட்டுமொத்த உலகமும் இந்த மோப்பநாயை ஹூரோவாக கொண்டாடுகிறது. மேலும் இவ்வகை நாய்கள் பயங்கரவாதிகளின் எதிரியாக உள்ளன என்பதில் துளியளவும் சந்தேகமில்லை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com