உலகம்
ஈக்குவடோரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
ஈக்குவடோரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
ஈக்குவடோர் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
QUITO ROSE பகுதியில் பெய்த கனமழை காரணமாக, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 47 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். அது தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன. 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால், அவர்களை மீட்கும் பணியில், வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதால், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.