நேபாளம்| மழை வெள்ளம், மண் சரிவில் சிக்கி 47 பேர் பலி!
நேபாளத்தில் பெய்துவரும் தொடர் மழையால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாட்டில் தொடர் மழையின்விளைவாக ஏற்பட்ட பெரும் வெள்ளம்மற்றும் மண் சரிவில் சிக்கி 47 பேர்உயிரிழந்துள்ளனர்.
கோஷி மாநிலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தவர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
நேபாளத்தின் 7 மாநிலங்களில் 5இல் மழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாக்மதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. மேலும் சிலநாட்களுக்கு மழை நீடிப்பதுடன் மண்சரிவுகளும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மோசமானவானிலை காரணமாக காத்மாண்டு விமான நிலையத்தில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
உதவிகரம் நீட்டும் இந்தியா..
நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
சமூக வலைளத்தில் பதிவிட்டுள்ள அவர், நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சிரமமான நேரத்தில் நேபாள மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும், தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.