சீனாவில் தொடரும் மழை - உயரும் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை!

சீனாவில் தொடர் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
சீனா
சீனாமுகநூல்

கடந்த சில வாரங்களாகவே, தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில், கனமழை பெய்து வருகிறது. இதனால், மாகாணத்தின் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகிலுள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால், மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் காணாமல்போயுள்ளதால், அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சீனா
வியட்நாம் சென்ற புதின்.. விரும்பாத அமெரிக்கா.. சந்திப்பில் நடந்தது என்ன.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!

வெள்ளத்தால் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,247 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 80க்கும் மேற்பட்ட சாலைகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 6,800 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மின்கோபுரங்கள் சரிந்து விழுந்துள்ளதால், மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com