\
ஒரு மாத மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்தது - மிதக்கும் பாரீஸ்

ஒரு மாத மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்தது - மிதக்கும் பாரீஸ்

ஒரு மாத மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்தது - மிதக்கும் பாரீஸ்
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளதால், ஏராளமான நகரங்கள் அங்கு நீரில் முழ்கின. 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரை திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. இது ஒரு
மாதத்தில் அங்கு பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் நீரில் முழ்கியுள்ளதால் தற்காலிகமாக
மூடப்பட்டுள்ளன. நகரின் பிரதான பகுதிகளும், சாலைகளும் வெள்ளத்தில் முழ்கியதால் ஏராளமானோர் வீடுகளை இழந்து பொது இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.  

கடந்த 1995-ம் ஆண்டு பாரீஸில் 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆனால் தற்போது பெய்த மழை அதனைகாட்டிலும் அதிகம் என்றும்,
குறிப்பாக பாரீசின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புயலால் பெரிதான அளவுக்கு
சேதம் எதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிரான்சின் அண்டை நாடான சுவிட்சர்லாந்திலும் இந்த புயலின் தாக்கத்தால் பல இடங்களில்
கனமழை பொழிந்தது. இதனால், அங்கு மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com