கென்யாவில் விடாது வெளுத்து வாங்கும் கனமழை.. தண்ணீரில் மிதக்கும் வீடுகள்.. பலியாகும் உயிர்கள்!

கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
கென்யா
கென்யாமுகநூல்

கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.

கென்யாவில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் வீடுகள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஒரு சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கென்யா பேரிடர் குழுவினர் அளித்துள்ள தகவலின்படி, ”மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 110 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கென்யா
தொடரும் சோகம்: அமெரிக்காவில் கார் மோதி 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

காணமால் போனவர்களை தேடும் பணியில் பேரிடர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மழை-வெள்ளத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். “ என்று தெரிவித்துள்ளது.

தலைநகர் நைரோபி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் மழை-வெள்ளத்தால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com