\
நேபாளத்தில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு
Published on

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. 25 பேரை காணவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காத்மாண்டுவின் வடகிழக்கு பகுதியில் சிந்துபல்சவுக் மாவட்டத்தில் உள்ள மெலாம்சி என்ற ஊரில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 11 பேரில் ஒருவர் இந்தியர் என்றும், இரண்டு பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சீன நிறுவனம் மேற்கொண்டு வரும் குடிநீர் திட்டத்தில் பணியாற்றி வந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com