அச்சமூட்டும் பருவநிலை மாற்றம்: அணிவகுக்கும் அபாயங்கள் என்னென்ன?

அச்சமூட்டும் பருவநிலை மாற்றம்: அணிவகுக்கும் அபாயங்கள் என்னென்ன?
அச்சமூட்டும் பருவநிலை மாற்றம்: அணிவகுக்கும் அபாயங்கள் என்னென்ன?

பருவ நிலை மாற்ற பிரச்னையால் உலக நாடுகள் பல்வேறு வகையான பாதிப்புகளை வரும் அடுத்தடுத்த ஆண்டுகளில் எதிர்கொள்ளும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது

ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்ற பிரச்னை குறித்த நாடுகளுக்கு இடையிலான அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் சராசரி வெப்ப நிலை உயரும் சூழலில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலகெங்கும் இயற்கை பேரிடர்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்றும் இவை தவிர்க்க முடியாதது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌‌‌‌பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் சில சரி செய்ய முடியாத அளவுக்கு நிரந்தரமானதாக இருக்கும் என்றும் ஐபிசிசி அறிக்கை எச்சரித்துள்ளது.

இயற்கையை பாதுகாப்பதில் காட்டும் அலட்சியத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளை பற்றிய இறுதிக்கட்ட எச்சரிக்கையை இந்த அறிக்கை என ஐபிசிசி தெரிவித்துள்ளது. கரியமில வாயு உமிழ்வு பிரச்னையால் இந்தியாவில் சென்னை, மும்பை, இந்தூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com