பாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்ததை நேரலை செய்த வாலிபர்
ரஷ்யாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ப்ளாக் மாம்பா பாம்பை கடிக்க வைத்து தான் தற்கொலை செய்து கொள்வதை சமூக வலைதளத்தில் நேரலை செய்துள்ளார்.
ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த அர்ஸ்லான் வாலீவ் பிரபலமான பாம்புகள் வல்லுநர். இவரது தனது மனைவி எகடீரினா காட்யாவுடன் சேர்ந்து, பாம்புகளை குறித்து யூட்யூபில் வீடியோ பதிவிட்டு வருபவர். இவரது வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
கடந்த மாதம் வாலீவ், தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, காட்யாவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் காட்யா பிரிந்து சென்றார். எனினும், சில தினங்களுக்கு முன் தனது செயலுக்கு வருந்திய வாலீவ், பொது இடத்தில் தனது தவறுக்காக காட்யாவிடம் மன்னிப்புக் கேட்டு கெஞ்சியுள்ளார். ஆனால் காட்யா மன்னிக்கவில்லை, மேலும் வாலீவுடனான திருமணத்தை ரத்து செய்யவும் விண்ணப்பித்தார்.
இதைத் தாங்கிக்கொள்ள முடியாத வாலீவ், தனது செல்லப் பிராணிகளுள் கொடிய விஷம் கொண்ட ப்ளாக் மம்பா என்ற பாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தற்கொலையை சமூக வலைதளத்தில் நேரலையும் செய்தார். அதை பார்த்து யாராவது தனது மனைவியிடம் தெரிவிப்பார்கள் என்று கருதி இவ்வாறு செய்வதாக இறப்பதற்கு முன் வாலீவ் நேரலையில் கூறினார். வாலீவ்-ன் இந்த முடிவு, அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.