வயிற்றில் குழந்தை.. கண்டறியப்பட்ட அரிய வகை கேன்சர்.. ஆனாலும், ஆரோக்கியமாக பிறந்த குழந்தை!

வயிற்றில் குழந்தை.. கண்டறியப்பட்ட அரிய வகை கேன்சர்.. ஆனாலும், ஆரோக்கியமாக பிறந்த குழந்தை!
வயிற்றில் குழந்தை.. கண்டறியப்பட்ட அரிய வகை கேன்சர்.. ஆனாலும், ஆரோக்கியமாக பிறந்த குழந்தை!

இங்கிலாந்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டு கீமோ சிகிச்சை எடுத்துவந்த பெற்றோருக்கு எல்லாவற்றை தாண்டி ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. தற்போது சிகிச்சை முடிந்து குழந்தையுடன் ஹேப்பியாக கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளனர் அத்தம்பதியர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ஜேம்ஸ் - பெத்தானி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜேம்ஸுக்கு ஹாட்ஜ்கின் லிம்போமா
என்ற வகை கேன்சர் தொற்று உறுதியானது இவர்களின் வாழ்க்கையையே புரட்டிபோட்டது. இருப்பினும் கேன்சர் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளவேண்டும் என முடிவெடுத்தனர் இத்தம்பதியர்.

அவர்கள் திட்டமிட்டபடி, ஜனவரிமாதம் பெத்தானி கர்ப்பமானது உறுதியாகியுள்ளது. ஆனால் இவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. குழந்தை உருவாகி 21 வாரங்கள் ஆனபோது பெத்தானியும் ஜேம்ஸ் பாதிக்கப்பட்டிருந்ததைப்போலவே Non-Hodgkin lymphoma என்ற அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜேம்ஸ் மற்றும் பெத்தானிக்கு சிகிச்சையளித்த ஹீமாட்டாலஜிஸ்ட் டாக்டர் சலிம் ஷஃபீக் கூறுகையில், “கர்ப்பகாலத்தில் Non-Hodgkin lymphoma என்ற அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்படுவது என்பது மிகவும் அரிது. எனது 25 வருட அனுபவத்தில் நான் இதுபோன்ற சூழலில் முதன்முதலில் சிகிச்சையளித்தது பெத்தானிக்குத்தான். கணவன் - மனைவி இருவருக்குமே கீமோதெரபி சிகிச்சை தேவைப்பட்டது. இருவரும் ஒரு நல்ல புரிதலின்கீழ் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்” என்றார்.



இதுகுறித்து பெத்தானி கூறுகையில், ”ஆண்டின் தொடக்கத்தில் நான் ஜேம்ஸ் தலைமுடியை சவரம்செய்ததுபோல, கீமோ சிகிச்சையால் எனக்கு முடி கொட்ட தொடங்கியபோது என்னுடைய தலையை ஜேம்ஸ் சவரம்செய்தார். எனது கீமோதெரபி சிகிச்சை முழுமையான சமயத்தில், அறுவைசிகிச்சைமூலம் பத்திரமாக பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். எங்கள் குழந்தை ஹெய்தி நலமுடன் உள்ளார். ஹெய்தியின் பிறந்தநாள்தான் எங்களுடைய வாழ்வில் சிறந்த நாள் என்பதை நானும் ஜேம்ஸும் ஏற்றுக்கொள்கிறோம். ஹெய்தி அற்புதமான குழந்தை என டாக்டர் ஷஃபீக் கூறியது முழுக்க முழுக்க உண்மை” என்றார்.

கர்ப்பகாலத்தின்போது ஜேம்ஸ் மற்றும் பெத்தானி இருவருமே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தாலும் அவற்றின் விளைவாக ஹெய்தி தற்போது ஆரோக்கியமான குழந்தையாகப் பிறந்திருக்கிறாள். கேன்சரால் எந்த பக்கவிளைவுகளும் அவளுக்கு ஏற்படவில்லை. ஹெய்தி வரவுக்குப்பிறகு சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் பெத்தானியும், ஜேம்ஸும். இந்த ஆண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com