\
அடிக்கடி நீதிமன்றம் வருவதால் உடல்நிலை பாதிப்பு: அவகாசம் கேட்கும் ஆங்சான் சூச்சி

அடிக்கடி நீதிமன்றம் வருவதால் உடல்நிலை பாதிப்பு: அவகாசம் கேட்கும் ஆங்சான் சூச்சி

அடிக்கடி நீதிமன்றம் வருவதால் உடல்நிலை பாதிப்பு: அவகாசம் கேட்கும் ஆங்சான் சூச்சி
Published on

வழக்கு விசாரணைக்காக அடிக்கடி நீதிமன்றத்தில் ஆஜராவதால், பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூச்சியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் 8 மாதங்களுக்கு முன்பு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஆங் சான் சூச்சி பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசத் துரோகம், முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தது உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன. வாரம் ஒருமுறை இந்த வழக்குகளின் விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் ஆஜராக அனுமதி கேட்டும் அவர் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com