“91 வயதிலும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை!”- கம்பீரமாக வலம் வரும் அமெரிக்க போலீஸ் அதிகாரி

“91 வயதிலும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை!”- கம்பீரமாக வலம் வரும் அமெரிக்க போலீஸ் அதிகாரி

“91 வயதிலும் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை!”- கம்பீரமாக வலம் வரும் அமெரிக்க போலீஸ் அதிகாரி
Published on

91 வயது முதியவர் என்றதும் ஓய்வு பெற்றவர் என்றுதான் சிலர் எண்ணுவார்கள். ஆனால் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர்.

அமெரிக்கா நாட்டின் ஆர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த எல்.சி.ஸ்மித் எனும் 91 வயதான காவல்துறை அதிகாரி, சட்ட அமலாக்க முகமையில் 56 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். காவல்துறைப் பணியில் இருக்கும் பரபரப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறும் ஸ்மித், அந்தப் பரபரப்பான சூழலுக்காகவே தாம் 1960களில் காவல்துறையில் சேர்ந்ததாக சொல்கிறார்.

சில வருடங்களுக்குமுன் காவல்துறையிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்த அவருக்குச் சில மாதங்களிலேயே வேலைக்குத் திரும்ப விருப்பம் வந்தது. தற்போதைக்கு ஓய்வுபெறும் திட்டம் ஏதுமில்லை என்று கூறும் ஸ்மித், மே மாதம் தனது 92 வது பிறந்த நாள் வரும்போது, கடவுள் கட்டளையிட்டால் ஓய்வு பெறுவேன் என்கிறார்.

இதுகுறித்து மக்கள் தொடர்பு அலுவலரான டானா வெதர்பி கூறுகையில் “ஸ்மித் ஒரு அன்பான அதிகாரி என நகரம் முழுவதும் அறியப்படுகிறார்.எல்லோரும் அவரைப் பார்க்கும்போது மரியாதை செலுத்துகிறார்கள். இது வேறெந்த அதிகாரிகளுக்கும் கிடைக்காதது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com