\
he 5,000-Year Journey of the Proto-Indo-European Language
புரோட்டோ மொழிX

'புரோட்டோ' மொழி வரலாறு.. இந்தி, ஆங்கிலத்தின் மூலம் எது? - புதிய ஆய்வு

புரோட்டோ இண்டோ யூரோப்பியன் மொழி பரவியதற்கு போர், வன்முறை மட்டுமல்லாமல் மக்களின் இடப்பெயர்ச்சி, வணிகம், கலாச்சாரக் கலப்பு போன்ற பல காரணிகள் காரணமாக இருந்ததாக லாரா ஸ்பின்னி விளக்குகிறார்.
Published on

பிரிட்டிஷ் அறிவியல் எழுத்தாளர் லாரா ஸ்பின்னி எழுதிய 'புரோட்டோ ஹவ் ஒன் ஏன்சியன்ட் லாங்குவேஜ் வென்ட் குளோபல்' என்ற புத்தகம் உலக மொழிகளின் தோற்றம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு யூரேசிய புல்வெளிகளில் சிலரால் மட்டுமே பேசப்பட்ட 'புரோட்டோ இண்டோ யூரோப்பியன்' என்ற பழங்கால மொழி, இன்று உலக மக்கள்தொகையில் பாதியளவினரின் தாய்மொழியாக உருவெடுத்துள்ளது. இந்த ஒரே ஒரு மொழியிலிருந்துதான் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், பாரசீகம், கிரேக்கம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நவீன மொழிகள் மற்றும் வட்டார வழக்குகள் கிளைத்து வளர்ந்துள்ளன.

இந்த மொழி பரவியதற்குப் போர் அல்லது வன்முறை மட்டுமே காரணம் அல்ல என்றும், மக்களின் இடப்பெயர்ச்சி, வணிகம் மற்றும் கலாச்சாரக் கலப்பு போன்ற பல சிக்கலான காரணிகள் இதில் அடங்கியுள்ளன என்றும் லாரா ஸ்பின்னி தெரிவித்துள்ளார். தற்போது மரபியல் வல்லுநர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழியியலாளர்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த மொழியின் வரலாற்றுப் பாதையை முழுமையாகக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

he 5,000-Year Journey of the Proto-Indo-European Language
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com